திமுக MLA-க்களுக்குத் தவெக விரித்த ரகசிய வலை.. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்கப் போடப்பட்ட மாஸ்டர் பிளான்.. ஷாக்கில் மு.க. ஸ்டாலின்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக MLA-க்களுக்குத் தவெக விரித்த ரகசிய வலை.. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்கப் போடப்பட்ட மாஸ்டர் பிளான்.. ஷாக்கில் மு.க. ஸ்டாலின்..!

Published

on

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கத் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாகப் பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் இந்த அரசியல் நகர்வை முறியடிக்கும் விதமாகவும், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வியூகமாகவும், திமுகவில் அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கே தவெக தரப்பு வலை விரித்துள்ளதாக அந்த வார இதழ் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் பலத்தைக் குறைத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவெக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

ஏற்கனவே திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் நியமன விவகாரம் தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களையே தவெக இழுக்க முயல்வதாக வெளியாகியுள்ள தகவல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in