“உயிரிழந்து பல நாட்கள் ஆகிவிட்டதா..?” வி.எஸ். பாபு மரணத்தில் மர்மம்..? மருத்துவ ஆதாரத்துடன் திமுக நிர்வாகி கிளப்பிய பகீர் சந்தேகம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிரிழந்து பல நாட்கள் ஆகிவிட்டதா..?” வி.எஸ். பாபு மரணத்தில் மர்மம்..? மருத்துவ ஆதாரத்துடன் திமுக நிர்வாகி கிளப்பிய பகீர் சந்தேகம்…!!

Published

on

தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் மரணம் தொடர்பாகத் திமுக சுற்றுச்சூழல் அணியைச் சேர்ந்தவரும் மருத்துவருமான சஃபி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபு உயிரிழந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கக்கூடும் என அவர் தனது பதிவில் பகிரங்கமாகச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

மருத்துவ ரீதியான காரணத்தைக் குறிப்பிட்டுள்ள டாக்டர் சஃபி, நீண்ட நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த உடலில்தான் ‘பிளட் செட்லிங்’ எனப்படும் ரத்தம் உறைந்து படிதல் நிலை காணப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த மரணத்தின் பின்னணியில் மருத்துவமனை நிர்வாகமோ அல்லது தமிழக வெற்றிக் கழகமோ ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே இது போன்ற செயல்களில் ஈடுபட மிகப்பெரிய முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் டாக்டர் சஃபி தனது பதிவில் விமர்சித்துள்ளார். மருத்துவப் பின்னணி கொண்ட திமுக நிர்வாகி ஒருவர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளும், எழுப்பியுள்ள சந்தேகங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in