LATEST NEWS
குஷியோ குஷி..! பொங்கல் பண்டிகைக்கு ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம்..? முதல்வர் விஜய் போடும் அதிரடித் திட்டம்..!!
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கையை எடுக்க அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு நிதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, எந்தத் தடையுமின்றிப் பயனாளிகளுக்குப் பணம் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசாகத் தலா ரூ.2,000 அல்லது ரூ.3,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
