LATEST NEWS
வெடித்த மோதல்..! “அரசியலில் வடிவேலு இடத்தை நிரப்புகிறார் வைகோ” வாங்கியதைவிட அதிகமாகக் கூவுகிறார்… மல்லை சத்யா சரமாரி அட்டாக்..!!
திரைத்துறையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லாத குறையை, அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பூர்த்தி செய்து வருவதாக திராவிட வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைகோவைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அக்கூட்டணியில் ‘அழையா விருந்தாளியாக’ச் சென்று வைகோ ஒட்டிக்கொண்டிருப்பதாக மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “வாங்கியதைவிட அதிகமாகக் கூவுகிறார்” என்ற வடிவேலு நகைச்சுவையை மிஞ்சும் வகையில் வைகோ நாள்தோறும் பேசி வருவதாகவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு இனி மதிமுகவின் தேவை இல்லை என்று குறிப்பிட்ட மல்லை சத்யா, தந்தை வைகோ ஆரம்பித்து வைத்த கட்சியை அவரது மகன் துரை வைகோ விரைவில் முடித்து வைப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.
