பெரும் பரபரப்பு..! அவரு முன்னாள் முதலமைச்சரா இருந்தா என்ன..? முட்டாள்தனமான பேச்சுக்குப் பதில் இல்லை… ஸ்டாலினைச் சாடிய வைகோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! அவரு முன்னாள் முதலமைச்சரா இருந்தா என்ன..? முட்டாள்தனமான பேச்சுக்குப் பதில் இல்லை… ஸ்டாலினைச் சாடிய வைகோ…!!

Published

on

கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் இன்று காலை (நவம்பர் 16, 2026) கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தற்போதைய தமிழக அரசின் நிர்வாகத்தையும் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய அவர், விரைவில் அரசியல் சூழல் மாறும் என்றும் அதற்குத் திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் பேசினார்.

https://x.com/polimernews/status/2122250761052852477?a=ke-MXpuqlZxTHgysMak&s=20

Advertisement

மு.க. ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடனடியாகவும் ஆவேசமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சி முடிந்துவிட்டதாகவும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மு.க. ஸ்டாலினைச் சாடிய வைகோ, “முன்னாள் முதலமைச்சராக இருந்தால் என்ன? சிலரின் முட்டாள்தனமான பேச்சுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை” என்று காட்டமாகக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in