LATEST NEWS
பரிகார பூஜை முதல் புழல் சிறை வரை.. முதல்வர் விஜய்யின் ரகசியங்களை அம்பலப்படுத்திய மு.க.ஸ்டாலின்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பட்டியலிட்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தவெக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் மின்வெட்டுப் பிரச்சனைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசு விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
“முதலமைச்சர் விஜய் கோட்டு சூட் போடுகிறார், ஜோசியர் சொன்னபடி வேட்டி சட்டை கட்டுகிறார், அண்டை மாநிலங்களுக்கும் புழல் சிறைக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்கிறார்” என்று மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத்தான் தற்போது தவெக அரசு புதிய திட்டங்கள் போலத் திறந்து வைத்து ஏமாற்றி வருகிறது என்றும் அவர் தனது உரையில் சாடினார்.
முதலமைச்சர் பதவி என்பது சினிமா படப்பிடிப்புப் போலக் கால்ஷீட் கொடுத்துவிட்டு வந்து நடிக்கும் வேலை கிடையாது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “விஜய் 10-5 மணிக்கு வேலைக்குப் போகிறேன் என்று பாவ்லா காட்டுகிறார், அதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை லீவு வேறு எடுத்துக் கொள்கிறார்” என அவரது பணி நடைமுறையை விமர்சித்தார். முதலமைச்சராக இருப்பவர் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து 24 மணி நேரமும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என இந்த மேடையில் அவர் வலியுறுத்தினார்.
