“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய கொடூரம்” சென்னையில் பச்சிளம் குழந்தையை அநாதையாக தூக்கிவீசிவிட்டு சென்ற முன்னாள் விமானப் பணிப்பெண் கைது.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய கொடூரம்” சென்னையில் பச்சிளம் குழந்தையை அநாதையாக தூக்கிவீசிவிட்டு சென்ற முன்னாள் விமானப் பணிப்பெண் கைது.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

சென்னை நீலாங்கரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைத் தெருவில் வீசிச் சென்ற வழக்கில், முன்னாள் விமானப் பணிப்பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாங்கரை பகுதியில் உள்ள ஒரு தெருவில் பச்சிளம் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குழந்தையைக் கைவிட்டது டெல்லியைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணிப்பெண் அகான்ஷா லால் என்பதும், அவருக்கு அவரது தாயார் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவினால் இந்த குழந்தை பிறந்ததாகவும், அதனால் ஏற்பட்ட அவமானம் மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் குழந்தையைத் தெருவில் வீசிச் சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in