நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. நள்ளிரவில் தூங்கிய 12 வயது சிறுமி.. ஓடையில் கிடந்த உடல்.. தலை எங்கே..? அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. நள்ளிரவில் தூங்கிய 12 வயது சிறுமி.. ஓடையில் கிடந்த உடல்.. தலை எங்கே..? அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தின் லால்மடியா காவல் எல்லைக்குட்பட்ட தஹுவா கிராமத்தில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டு, அவளது உடல் ஓடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை, நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடத்திச் சென்று இந்த கொடூரத்தைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் ஓடையில் சிறுமியின் உடல் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டனர். கொலையுண்ட சிறுமியின் தலை இன்னும் மீட்கப்படாததால் ஒட்டுமொத்த கிராமமும் அச்சத்தில் உறைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த லால்மடியா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரக் குற்றத்திற்கான காரணம் என்ன என்பதும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in