“பூட்டையும் உடைக்கல.. ஸ்டார்ட்டும் பண்ணல” காரை அலேக்காக திருடிச் சென்ற கொள்ளையர்கள்… இணையத்தில் வைரலாகும் சிசிடிவி அதிரடி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பூட்டையும் உடைக்கல.. ஸ்டார்ட்டும் பண்ணல” காரை அலேக்காக திருடிச் சென்ற கொள்ளையர்கள்… இணையத்தில் வைரலாகும் சிசிடிவி அதிரடி வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் காரின் பூட்டை உடைக்காமலும், அதனை ஸ்டார்ட் செய்யாமலும் ஒட்டுமொத்த காரையும் கிரேன் மூலம் தூக்கிச் சென்று திருடிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நொய்டாவின் செக்டார்-15 பகுதியில் உள்ள நயா பான்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் விபின் குமார் என்பவரின் வெள்ளை நிற வேகன் ஆர் கார் கடந்த ஜூலை மாதம் அவரது வீட்டின் முன்பிருந்து திடீரென மாயமானது. காரைத் தேடி அலைந்த விபின் குமார், அது கிடைக்காததால் அதிர்ச்சியடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

பின்னர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் காரைத் திருடர்கள் கையாண்ட நூதன முறை வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கமாக காரின் பூட்டை உடைத்தோ அல்லது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியோ திருடும் திருடர்கள், இந்தச் சம்பவத்தில் மிகவும் சாதுரியமாக ஒரு கிரேனைக் கொண்டு வந்து காரை அப்படியே தூக்கிக்கொண்டு தப்பியோடியது பதிவாகியிருந்தது. இந்த விசித்திரமான திருட்டு முறையைக் கண்டு அப்பகுதி மக்களும், காவல்துறையினரும் பெரும் வியப்படைந்துள்ளனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கார்த் திருட்டு கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி நடந்திருந்தாலும், காவல்துறையினர் நீண்ட தாமதத்திற்குப் பிறகு நவம்பர் 2ஆம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்தத் திருட்டு வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள நொய்டா பேஸ்-1 காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைத் தூக்கிச் சென்ற கிரேன் வாகனத்தையும், அதனை இயக்கிய நபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in