பல மாதங்களாக தொடர் இருமல்.. நுரையீரல் புற்றுநோய் என சந்தேகம்… அறுவை சிகிச்சையின் போது வெளிவந்த பகீர் உண்மை:… முதியவர் உடலுக்குள் இருந்தது என்ன தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பல மாதங்களாக தொடர் இருமல்.. நுரையீரல் புற்றுநோய் என சந்தேகம்… அறுவை சிகிச்சையின் போது வெளிவந்த பகீர் உண்மை:… முதியவர் உடலுக்குள் இருந்தது என்ன தெரியுமா..?

Published

on

72 வயது முதியவர் ஒருவருக்குப் பல மாதங்களாகத் தொடர் இருமல் மற்றும் நெஞ்சுத் தொற்று இருந்ததால், அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் போன்ற கட்டியான ‘டியூமர்’ இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். நீண்ட நாட்களாக சளியுடன் கூடிய இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதி முற்றிலும் அடைபட்டிருந்தது தெரியவந்தது. அங்கு கடுமையான வீக்கமும் இருந்ததால், மருத்துவர்கள் மிகவும் கவலையடைந்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் அதிநவீன எண்டோஸ்கோப்பி தொழில்நுட்பம் மூலம் அவரது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் பகுதிக்குள் செலுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு சிவந்த வீங்கிய தசைக்கட்டி போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை ஒரு அரிய வகை நுரையீரல் கட்டி என்று நினைத்த மருத்துவர்கள், அதை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை சிகிச்சையைத் தொடங்கினர்.

Advertisement

ஆனால், அந்த வீக்கத்தைச் சுத்தம் செய்துவிட்டு, சிறப்பு இயந்திரங்கள் மூலம் அந்தப் பொருளை வெளியே எடுத்தபோது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், அது எந்தவொரு புற்றுநோய்க் கட்டியும் அல்ல; மாறாக ஒரு மனிதனின் உண்மையான பல் ஆகும். முதியவரின் மூச்சுக்குழாயின் ஆழமான பகுதியில் ஒரு பல் பல மாதங்களாகச் சிக்கியிருந்தது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in