“மதுபோதையில் வண்டி மீது மோதி மிரட்டினார்..” கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது அடுத்த பரபரப்புப் புகார்.. ஹோட்டல் ஊழியர் பகீர் பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மதுபோதையில் வண்டி மீது மோதி மிரட்டினார்..” கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது அடுத்த பரபரப்புப் புகார்.. ஹோட்டல் ஊழியர் பகீர் பேட்டி..!!

Published

on

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மதுபோதையில் வந்து தனது வாகனத்தின் மீது மோதியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக ஹோட்டல் பணியாளர் ஒருவர் பரபரப்புப் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டின் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டின் அருகே செய்தியாளர்களிடம் பேசியபோது, “எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மதுபோதையில் வந்து எனது வாகனத்தின் மீது மோதிவிட்டார். இதனால் வாகனம் சேதமடைந்தது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ‘அப்படித்தான் செய்வேன்’ என மிரட்டல் விடுத்தார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அவர் இதுவரை எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும் சுரேஷ் விமர்சித்துள்ளார்.

Advertisement

இவ்வாறு ஹோட்டல் பணியாளர் சுரேஷ் எம்.எல்.ஏ.-வுக்கு எதிராகப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அங்குத் திரண்ட தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறையினர் மூலமாக சுரேஷ் அவர் பணிபுரியும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய புகாரும், அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in