BREAKING:த.வெ.க. எம்.எல்.ஏ-வை உடனே கைது செய்க.. டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி அதிரடி மனு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:த.வெ.க. எம்.எல்.ஏ-வை உடனே கைது செய்க.. டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி அதிரடி மனு..!!

Published

on

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் மனு அளித்தார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 6 மாத கால ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகளவில் நடைபெற்றுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கடும் கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ. மீது பாரபட்சமின்றிச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in