வாவ்..! “நேரம் குறிச்சா போதும், மெசேஜ் தானா போகும்” – வாட்ஸ்அப்பில் அறிமுகமான அதிரடி ‘Scheduled Messages’ வசதி.. குஷியில் பயனர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாவ்..! “நேரம் குறிச்சா போதும், மெசேஜ் தானா போகும்” – வாட்ஸ்அப்பில் அறிமுகமான அதிரடி ‘Scheduled Messages’ வசதி.. குஷியில் பயனர்கள்..!!

Published

on

உலகின் முன்னணி செயலியான வாட்ஸ்அப்பில் ‘ஷெட்யூல்டு மெசேஜஸ்’ (Scheduled Messages) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் குறுஞ்செய்திகளை 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை முன்கூட்டியே நேரத்தைத் தேர்வு செய்து, தனிப்பட்ட சாட்கள் மற்றும் குழு சாட்களில் (Group Chats) அனுப்பத் திட்டமிடலாம்.

இந்தப் புதிய வசதியின் கீழ் சாதாரண குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும். குறிப்பாக, பயனர்களின் செல்போன் அணைத்து (Switch Off) வைக்கப்பட்டிருந்தாலும்கூட, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சரியான நேரத்தில் அந்த மெசேஜ் உரியவர்களுக்குச் சென்றடையும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Advertisement

மேலும், இவ்வாறு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பப்படும் அனைத்து மெசேஜ்களும் வழக்கம்போல ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ (End-to-End Encryption) பாதுகாப்புடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் இந்தப் புதிய அப்டேட், உலகம் முழுவதும் அடுத்த சில வாரங்களில் படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in