“34,000 வாட்ஸ்அப் குரூப்கள்..” திரைமறைவில் முதல்வர் விஜய் இறக்கிய ‘மரண மாஸ்’ டிஜிட்டல் படை.. மிரண்டுபோன எதிர்க்கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“34,000 வாட்ஸ்அப் குரூப்கள்..” திரைமறைவில் முதல்வர் விஜய் இறக்கிய ‘மரண மாஸ்’ டிஜிட்டல் படை.. மிரண்டுபோன எதிர்க்கட்சிகள்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுத்தேர்தலுக்கு முன்பே சுமார் 34,000 வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளைத் திரைமறைவில் ஒருங்கிணைத்து, இளைஞர்களைக் கவரும் வகையில் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் வியூகத்தை வகுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ‘நம்ம செங்கல்பட்டு’, ‘நம்ம தாராபுரம்’ போன்ற பொதுவான உள்ளூர் பெயர்களில் தொடங்கப்பட்ட இந்தக் குழுக்களில், ஆரம்பத்தில் பகுதி சார்ந்த செய்திகள் மற்றும் பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டு மக்கள் பெருமளவில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இக்குழுக்கள் வழியாகத் தவெகவுக்கு ஆதரவான அரசியல் கருத்துகளும், முந்தைய ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களும் பரப்பப்பட்டு, அவை பிரசாரத் தளங்களாக மாற்றப்பட்டதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் பாஜக பயன்படுத்திய இந்த டிஜிட்டல் வலையமைப்பு யுக்தியைத் தவெக வெற்றிகரமாகக் கையாண்டுள்ள தகவல் வெளியானதை அடுத்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய பாரம்பரிய கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. தவெகவின் இந்தத் ரகசிய டிஜிட்டல் வலிமையை எதிர்கொள்ளும் வகையில், தற்போது நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களைக் குறிவைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது சமூக வலைதளப் பிரிவுகளைத் தீவிரமாக வலுப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், தமிழக அரசியல் களத்தில் வழக்கமான களப்பிரசாரத்தைத் தாண்டி, முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவரும் டிஜிட்டல் பிரசாரம் தற்போது மிக முக்கியமான போட்டிக்களமாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in