LATEST NEWS
“ஒரே நேரத்தில் 4 எதிரிகள்” நேருக்கு நேர் சந்தித்த முதல்வர் விஜய்… அரங்கிற்குள் நுழைந்ததும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய சபரீசன், ஸ்டாலின், ரஜினி, கலாநிதி மாறன்… இணையத்தைத் தெறிக்கவிடும் வைரல் செய்தி..!!
தமிழக முதலமைச்சர் விஜய் தனது அரசியல் பயணத்தில் தனக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 4 முக்கியப் புள்ளிகளை ஒரே மேடையில் சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது .
விஜய்யின் அரசியல் வருகையின் போது, அப்போதைய ஆளுங்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் தரப்பிலிருந்து பொதுக்கூட்ட அனுமதிகள் முதல் நிர்வாக ரீதியாகப் பல தடைகள் உருவாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல், சபரீசன் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயன்றதாகவும், கலாநிதி மாறன் தேர்தல் நேரத்தில் தனது தொலைக்காட்சியில் விஜய்யின் திரைப்படங்களை ஒளிபரப்பாமல் ஊடக இருட்டடிப்பு செய்ததாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்கில், பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்த நடிகர் ரஜினிகாந்த் திரைமறைவில் முயற்சித்ததாகவும் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதிகார மையங்கள் முதல் திரையுலக ஜாம்பவான்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து முட்டுக்கட்டை போட்ட போதிலும், மக்கள் ஆதரவு என்ற ஒற்றைப் பலத்தால் அத்தனை சவால்களையும் முறியடித்து விஜய் இன்று முதலமைச்சராக உயர்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மு.க. ஸ்டாலின், சபரீசன், கலாநிதி மாறன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய நால்வரையும் முதலமைச்சர் விஜய் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்தார். முதலமைச்சராக விஜய் அரங்கிற்குள் நுழைந்ததும், ஒருகாலத்தில் அவருக்கு எதிராக வியூகம் வகுத்ததாகக் கூறப்பட்ட அந்த நால்வரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய காட்சி, காலம் காத்திருந்து பதிலளித்த மக்கள் சக்தியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
