LATEST NEWS
“தவெக-வை ‘பாலியல் சுரண்டல் கழகம்’ எனப் பெயர் மாற்றலாம்..” திருமண மேடையில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்.. தமிழக அரசியலில் வெடித்த புதுப் புயல்..!!
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தை இனி ‘பாலியல் சுரண்டல் கழகம்’ எனப் பெயர் மாற்றலாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசிய ஸ்டாலின், தவெக நிர்வாகிகளால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, காரமடையில் தவெக ஒன்றிய நிர்வாகி ஒருவர் தலைமறைவாக உள்ளதையும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தொல்லை கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று தவெக அமைச்சர்கள் தொடர்ந்து சமாளித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அரசு இயந்திரமும் அமைச்சர்களும் உண்மையை மறைக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருமண மேடையில் மு.க. ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்தக் கடுமையான விமர்சனங்கள், ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
