LATEST NEWS
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக எம்.பி. மாரடைப்பால் காலமானார்… சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரம்..!!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்பி ராமராவ் வடகுடே (72) மாரடைப்பு காரணமாகக் காலமானார். நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தாங்கர் சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக ராமராவ் வடகுடே அறியப்பட்டார். அரசியல் பயணத்தில், 2019-ஆம் ஆண்டு பாஜகவில் இணைவதற்கு முன்பு அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
