LATEST NEWS
“தங்கம் வென்ற மூன்றே நாளில் இப்படி ஒரு முடிவா..?” பாடிபில்டர் உயிரிழப்புக்கு இதுதான் காரணமா..?! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றே நாட்களில், ஈராக் நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் சஜாத் ஜவாத் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதக்கம் வென்ற மகிழ்ச்சி அடங்குவதற்குள்ளாகவே அவர் உயிரிழந்தது விளையாட்டுத் துறையினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடினமான போட்டிக்குப் பிறகு அவரது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாடிபில்டிங் போட்டிகளுக்குப் பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் தொடர்பான பேச்சுகள் இதன் பின்னணியில் எழுந்துள்ளன.
இருப்பினும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
