LATEST NEWS
எடப்பாடி தலையில் அடுத்த இடி..! வடசென்னையைத் தொடர்ந்து தென் சென்னையிலும் முக்கியப் புள்ளியைத் தட்டித் தூக்கிய தவெக.. அதிமுகவில் பரபரப்பு..!!
தென் சென்னை மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.கலைமுருகன் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர்.கலைமுருகன், அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 3, 2026 அன்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். வடசென்னையைத் தொடர்ந்து தற்போது தென் சென்னையிலிருந்தும் முக்கிய நிர்வாகி ஒருவர் விலக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சென்னை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரின் இரு முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சி மாறும் சூழல் உருவாகியிருப்பது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சி கட்டமைப்பைத் தக்கவைப்பதில் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
