அந்த வீடியோவை வெளியிட்டது யார்..? அந்த ஒரு வார்த்தையில் SP வேலுமணியை ஓரங்கட்டிய EPS? – அதிமுகவில் வெடித்த புது சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த வீடியோவை வெளியிட்டது யார்..? அந்த ஒரு வார்த்தையில் SP வேலுமணியை ஓரங்கட்டிய EPS? – அதிமுகவில் வெடித்த புது சர்ச்சை..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் எஸ்பி வேலுமணி சந்திப்பு நடத்தியதாக வெளியான வீடியோ குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அந்த வீடியோவை ஊடகங்களே வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குறித்து அந்தந்தக் கட்சியினரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று பதிலளித்தார். மேலும், அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்பி வேலுமணியும் ஒருவர் என்றும், அவரைப் பற்றி இங்கு தனியாகக் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

அதிமுகவின் மிக முக்கியத் தளபதியாகவும், கொங்கு மண்டலத்தின் சக்திவாய்ந்த முகமாகவும் பார்க்கப்படும் எஸ்பி வேலுமணியை, சாதாரண 2 கோடி உறுப்பினர்களில் ஒருவராக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருப்பது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலையும், இருவருக்கும் இடையிலான விரிசலையும் வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in