LATEST NEWS
அதிமுக – தவெக மோதலில் பாஜகவின் மாஸ்டர் பிளான்.. அதிமுகவை கையில் எடுக்கிறாரா வேலுமணி..? டெல்லி மேலிடத்தின் அதிரடி வியூகம்..!!
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர டெல்லி பாஜக தலைமை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழகச் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் விவகாரமும் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் தோல்விகளும் இந்த உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தின.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டெல்லி பாஜக மேலிடம், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை எப்படியாவது உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் மற்றும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் முக்கியப் பொறுப்பை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பாஜக தலைமை மறைமுகமாக ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடனான மோதலில் வேலுமணிக்குச் சாதகமாக டெல்லி ஆதரவு அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, அதிமுகவில் இருந்து மேலும் எந்தவொரு எம்.எல்.ஏ-வும் அல்லது முக்கிய நிர்வாகியும் தவெக பக்கமோ அல்லது ஆளுங்கட்சி பக்கமோ செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் எஸ்.பி.வேலுமணியிடமே வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தி, தங்களின் கூட்டணிக் கணக்குகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பாஜக இந்த நிபந்தனைகளையும் பொறுப்புகளையும் விதித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
