LATEST NEWS
“கையை வச்சுப் பார்டா..” அமெரிக்காவிற்குப் பகிரங்க சவால்… ஒரே நேரத்தில் 2 ஏவுகணைகளை ஏவும் அதிநவீன லாஞ்சர்.. போர் பதற்றத்தை எகிற வைக்கும் ஈரானின் அதிரடி வீடியோ..!!
அமெரிக்காவிற்குச் சவால் விடும் வகையில், ஈரான் தனது புதுவித ஏவுகணை லாஞ்சர் (Missile Launcher) குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டுத் தனது ராணுவ பலத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய ஏவுகணைத் தளத்தை ஈரான் ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்தப் புதிய ஏவுகணை லாஞ்சரானது, ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளை (Liquid-fuel missiles) ஏவும் அதிநவீனத் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் எதிரி இலக்குகள் மீது பலமடங்குத் தாக்குதல்களை நடத்த முடியும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், தற்போது F-16 ரக போர் விமானத்தையும் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகள் மற்றும் புதிய ஏவுகணை லாஞ்சர் வீடியோ வெளியீடு ஆகியவை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
