LATEST NEWS
“உன்ன சும்மா விட்ருவேனு நினைச்சியா” 7 வருடக் காதல்… வேறொரு பெண்ணுடன் திருமணம்.. கையில் பேனருடன் காதலன் வீட்டு வாசலில் ஷாக் கொடுத்த காதலி…!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, காதலனின் வீட்டு வாசலுக்குத் திருமண ஊர்வலத்துடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அப்பெண் கையில் வைத்திருந்த பதாகையில், “மணமகளை அழைத்துச் செல்ல திருமண ஊர்வலம் வந்துள்ளது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
தனது காதலன் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தன்னைக் காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்த வாக்குறுதியை மீறி நவம்பர் 21-ம் தேதி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவர் ஏற்பாடு செய்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
காதலனின் வீட்டு முன்பு இளம்பெண் திடீரெனத் திருமண ஊர்வலத்துடன் வந்து நின்றதால், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும், இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) சுமித் சுக்லா தெரிவித்துள்ளார்.
