நான் சொன்ன பேச்சை மக்கள் கேட்டதால்தான் “இப்போ தங்கம் விலை குறைஞ்சிருக்கு” அன்று சொன்ன அந்த விஷயம்.. பிரதமர் மோடி பெருமிதம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் சொன்ன பேச்சை மக்கள் கேட்டதால்தான் “இப்போ தங்கம் விலை குறைஞ்சிருக்கு” அன்று சொன்ன அந்த விஷயம்.. பிரதமர் மோடி பெருமிதம்…!!

Published

on

தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தான் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டதாலேயே, தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்கள் தேவையில்லாமல் தங்கம் வாங்குவதைத் தவிர்த்ததே இந்த விலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் ஒருவேளை உணவைத் தவிர்த்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதேபோல, சாதாரண மனிதனான தான் கூறிய அறிவுரையையும் நாட்டு மக்கள் மதித்துக் கேட்டதாகவும், அதன் மூலம் தங்கம் வாங்குவதைக் குறைத்துத் தங்கள் பணத்தைச் சேமித்துள்ளதாகப் பலரும் தன்னிடம் கூறுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Advertisement

பொருளாதார ரீதியாகவும், குடும்பச் சேமிப்பு ரீதியாகவும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டும் விதமாகப் பிரதமர் மோடி ஆற்றிய இந்த உரை, பொதுமக்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in