“செம ஐடியா.. கார், ரதம், குதிரை எல்லாம் பழசு பாஸ்…” மணமகனின் வேற லெவல் என்ட்ரியை பார்த்து திகைத்து போன மக்கள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம ஐடியா.. கார், ரதம், குதிரை எல்லாம் பழசு பாஸ்…” மணமகனின் வேற லெவல் என்ட்ரியை பார்த்து திகைத்து போன மக்கள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பயாக்பூர் பகுதியைச் சேர்ந்த அர்காபூர் கிராமத்தில், மணமகன் ஒருவர் ஆடம்பரக் கார்கள், குதிரை, ரதம் மற்றும் யானை ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு ஜேசிபி புல்டோசரில் ஊர்வலமாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மணமகன் அப்துல் கலாம் ஜேசிபி இயந்திரத்திற்கே மணமகனுக்கான தலைப்பாகை கட்டி அலங்கரித்து, அதன் மீது அமர்ந்தபடி மணப்பெண்ணின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். வழக்கமான திருமண ஊர்வலங்களுக்கு மாற்றாக அமைந்த இந்த வித்தியாசமான முயற்சியைக் காண்பதற்காக, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஆயிரக்கணக்கானோரும் சாலையில் திரண்டு வந்து வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக, ஜேசிபி புல்டோசரில் ஊர்வலமாகச் செல்ல வேண்டாம் என உறவினர்களும் நண்பர்களும் பலமுறை அறிவுறுத்திய போதிலும், தனது முடிவில் உறுதியாக இருந்த அப்துல் கலாம் தனது விருப்பப்படியே ஊர்வலத்தை நடத்தினார். புல்டோசரில் மணமகன் கெத்தாக வலம் வந்த இந்தச் சுவாரசியமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகின்றன. பஹ்ரைச் பகுதியில் நடைபெற்ற இந்த வித்தியாசமான திருமண ஊர்வலம் இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in