“மேலும் பல பெண்களுடன் ரகசிய உறவு இருந்தது” மீண்டும் என்விடியா சிஇஓ-வாகப் பொறுப்பேற்றதும் நிர்வாகக் குழுவிடம் ஜென்சன் ஹுவாங் பரபரப்பு வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேலும் பல பெண்களுடன் ரகசிய உறவு இருந்தது” மீண்டும் என்விடியா சிஇஓ-வாகப் பொறுப்பேற்றதும் நிர்வாகக் குழுவிடம் ஜென்சன் ஹுவாங் பரபரப்பு வாக்குமூலம்..!!

Published

on

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், தனக்கு மேலும் பல பெண்களுடன் ரகசிய உறவு இருந்ததை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

முன்னதாக, சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங், என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவல் மற்றும் மற்றொரு பெண் ஊழியர் ஆகியோருடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பில் இருந்ததாகச் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, நவம்பர் மாதத் தொடக்கத்தில் அவர் தனது சிஇஓ பதவியிலிருந்து விலகினார். இருப்பினும், தேசியப் பாதுகாப்பு சார்ந்து அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என அமெரிக்க அரசு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியதோடு, அமெரிக்க அதிபர் டிரம்பும் அவர் மீண்டும் சிஇஓ-வாக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், என்விடியா நிறுவனம் அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்துள்ளது.

Advertisement

இந்தப் புதிய நியமனத்தின்போது, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் தனக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எனினும், கூடுதலாக எத்தனை பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in