நள்ளிரவில் பயங்கரம்.. 2 இடங்களில் கருணாநிதி சிலைகளை உடைத்தது யார்..? சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்.. ஈரோட்டில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவில் பயங்கரம்.. 2 இடங்களில் கருணாநிதி சிலைகளை உடைத்தது யார்..? சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்.. ஈரோட்டில் பரபரப்பு..!!

Published

on

ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் முனிசிபல் காலனி ஆகிய இரண்டு இடங்களில் அமைந்திருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகள் மர்ம நபர் ஒருவரால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தனது கையிலிருந்த இரும்புக் கம்பியால் சிலைகளைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

காலையில் சிலைகள் சேதமடைந்திருப்பதைக் கண்ட அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிலைகளைத் தாக்கிய நபரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருணாநிதியின் சிலைகளைக் கம்பியால் அடித்து உடைத்தது ஹரி விக்னேஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஹரி விக்னேஷைக் கைது செய்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in