“மருந்து வாங்க போலாம் வாங்க…” அன்பாக அழைத்துச் சென்று ஜூஸில் விஷம் கலந்த கொடூரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே போட்ட பகீர் பிளான்..! ஜெய்ப்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மருந்து வாங்க போலாம் வாங்க…” அன்பாக அழைத்துச் சென்று ஜூஸில் விஷம் கலந்த கொடூரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே போட்ட பகீர் பிளான்..! ஜெய்ப்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி பகுதிக்கு அருகே சென்று ஜூஸ் வாங்கி, அதில் சல்ஃபாஸ் மாத்திரைகளைக் கலந்து மகேஷிற்கு கொடுத்துள்ளார். மனைவி மீது எந்த சந்தேகமும் இல்லாத மகேஷ் அந்த ஜூஸைக் குடித்த சில நிமிடங்களிலேயே விஷத்தின் வீரியத்தால் கடுமையாக அவதியுறத் தொடங்கியுள்ளார்.

இதன்பின்னர் கவிதா, தனக்கு 6-7 வருடங்களாகத் தொடர்பில் இருந்த தனது கள்ளக்காதலன் கணேஷ் மீனாவிற்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், இருவரும் அவரை அழைத்துக்கொண்டு சுமார் 2 முதல் 3 மணி நேரம் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளனர். நிலைமை மிகவும் மோசமடைந்த பிறகே, 14-வது எண் மேம்பாலம் அருகே வந்து, மகேஷின் சகோதரருக்கு போன் செய்து உடலநலம் சரியில்லை என நாடகமாடி குடும்பத்தின வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் மகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

Advertisement

கணவனின் திடீர் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்ததால், ஆகஸ்ட் 16 அன்று மகேஷின் தந்தை பாபூலால் மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கவிதா கூறிய பயண பாதையும், CCTV காட்சிகளில் பதிவான பாதையும் வேறு வேறாக இருந்ததைக் கண்டறிந்த காவல்துறை, கவிதாவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், திருமணத்திற்கு முன்பிருந்தே கவிதாவும் கணேஷும் காதலித்து வந்ததும், பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்த பிறகும் தொடர்பில் இருந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது. இதையடுத்து கவிதா மீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் கணேஷ் மீனா ஆகிய இருவரையும் ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in