“நான் இருக்கும் இடம் இதுதான்…” தாய்க்கும் ஓனருக்கும் லொகேஷனுடன் வீடியோ அனுப்பிய 27 வயது வாலிபர்.. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டல் அறையில் நடந்த திக் திக் சம்பவம்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் இருக்கும் இடம் இதுதான்…” தாய்க்கும் ஓனருக்கும் லொகேஷனுடன் வீடியோ அனுப்பிய 27 வயது வாலிபர்.. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டல் அறையில் நடந்த திக் திக் சம்பவம்.. பகீர் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கட்கேசர் அருகே உள்ள போச்சாரம் ஐடி காரிடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் விடுதி அறையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌதரிகுடா பகுதியில் அமைந்துள்ள ‘லிவிங் ட்ரீ ஓயு’ என்ற தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குண்டூரைச் சேர்ந்த கோட்டா ஸ்ரீராம் என்பவரே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குண்டூரில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஊழியராகப் பணியாற்றி வந்த ஸ்ரீராம் மீது, திரையரங்கின் பணம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு, ‘போன்பே’ மூலமாகத் தனது வங்கிக் கணக்கிற்கு 99,999 ரூபாயை மாற்றிக்கொண்டதாக உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீராமின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று தனது தாயாருக்கும், திரையரங்கு உரிமையாளருக்கும் தனது நிலைமையை விளக்கி வீடியோ பதிவுகளை அனுப்பியதுடன், தான் தங்கியிருந்த ஹோட்டலின் இருப்பிடத்தையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement

வீடியோ தகவலைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் ஸ்ரீராம் தங்கியிருந்த அறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சாரம் ஐடி காரிடார் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் அனுப்பிய வீடியோ பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in