“கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்”.. திடீரென மாயமான மகன்.. சிசிடிவியில் சிக்கிய கொடூர காதலனின் அதிர்ச்சி செயல்…!! – cinefeeds
Connect with us

CRIME

“கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்”.. திடீரென மாயமான மகன்.. சிசிடிவியில் சிக்கிய கொடூர காதலனின் அதிர்ச்சி செயல்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஐந்து வயது சிறுவன் ஆருஷ் ஷர்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாபூர் பாதிரி பஜார் பகுதியில் உள்ள மானஸ் விஹார் காலனியில் வசித்து வந்த இந்தச் சிறுவனை, அவரது தாய் ரூபி ஷர்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலன் ரித்திக் யாதவ் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காரில் சிறுவனை பாகாகடா பகுதியில் உள்ள ராப்தி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை ஆற்றில் வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரூபி ஷர்மாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் விவாகரத்து வழக்கு நடந்து வந்த நிலையில், ரித்திக் யாதவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்; இவர்களுக்கு இடையே அடிக்கடி சச்சரவுகள் நிலவி வந்துள்ளன. வியாழக்கிழமை அதிகாலையில் ரூபி வேலைக்குச் சென்றிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை ரித்திக் தூக்கிச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

சிறுவனைக் காணாத தாய் தேடிப் பார்த்துவிட்டு ஷாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ரித்திக்கை பிடித்து விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காட்டிய இடத்தின் அடிப்படையில் ராப்தி ஆற்றில் சிறுவனின் உடலைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்; உடல் மீட்கப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in