கள்ளக்காதல் படுத்தும் பாடு.. கணவனைக் கொல்லக் கடன் வாங்கி கூலிப்படை ஏவி.. மனைவி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. 36 மணி நேரத்தில் அம்பலமான பகீர் சதி..!! – cinefeeds
Connect with us

CRIME

கள்ளக்காதல் படுத்தும் பாடு.. கணவனைக் கொல்லக் கடன் வாங்கி கூலிப்படை ஏவி.. மனைவி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. 36 மணி நேரத்தில் அம்பலமான பகீர் சதி..!!

Published

on

கள்ளக்காதலுக்காகக் கடன் வாங்கி கூலிப்படையை ஏவி கணவனைப் படுகொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான நேஹா பர்வீன் மற்றும் முகமது இர்பான் ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்தக் குழந்தைகள் தாத்தாவுடன் வசித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு நேஹாவுக்கும் கரண் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் ரகசியமாகப் பழகி வந்த நிலையில், இந்தக் கள்ளக்காதல் விவகாரம் கணவர் இர்பானுக்குத் தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட நேஹா முடிவு செய்தார்.

இதற்காகக் காதலன் கரணுடன் சேர்ந்து கூலிப்படையைத் தேடிய நேஹா, கரணுக்குத் தெரிந்த இரண்டு நபர்கள் மூலம் சுமார் 17 வயதுடைய ஒருவரைப் படுகொலை செய்வதற்காக அணுகியுள்ளார். அவரிடம் கணவனைக் கொலை செய்ய 90,000 ரூபாய் பேரம் பேசிய நேஹா, அதற்காகத் தனியாகக் கடன் வாங்கி முன்பணமாக 40,000 ரூபாயைக் கொடுத்துள்ளார். திட்டமிட்டபடி நவம்பர் 10-ஆம் தேதி நேஹா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அவர் வீட்டை விட்டுச் சென்ற சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, கரண் மற்றும் அந்த நபர் ஆகியோர் இர்பானின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். இர்பான் கதவைத் திறந்த அடுத்த நொடியே, அவர் துப்பாக்கியால் இர்பானின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

Advertisement

இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வெறும் 36 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நேஹா, தனது காதலனுக்காகக் கடன் வாங்கி 90,000 ரூபாய்க்கு ஒருவரை ஏவி கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தான் தாய் வீட்டிற்குச் சென்ற ஒரு மணி நேரத்தில், அவர் தனது கணவரின் தலையில் சுட்டுக் கொன்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in