“மனைவியின் கண்முன்னே பட்டப்பகலில் பயங்கரம்..!” செல்போனில் பேசிக்கொண்டிருந்த கணவனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனைவியின் கண்முன்னே பட்டப்பகலில் பயங்கரம்..!” செல்போனில் பேசிக்கொண்டிருந்த கணவனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் இன்று காலை பட்டப்பகலில், மனைவியின் கண்முன்னே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சரண் கவுடா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னபட்னா தாலுகா ஹரிசந்திரா கிராமத்தைச் சேர்ந்த சரண் கவுடா, தனது மனைவி விமர்ஷினியுடன் எலகங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் வசித்து வந்ததோடு ‘தானி புராப்பர்டீஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகமும் நடத்தி வந்தார். காலை 10 மணியளவில் தனது அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு சரண் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

தன் கணவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமர்ஷினி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாகச் சரண் கவுடா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவிய முன்விரோதம் அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் எலகங்கா நியூ டவுன் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in