“அண்ணா, உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன்… என் கணவரை விட்டுவிடுங்கள்..!” மனைவியின் கண்முன்னே கொடூரமாக தாக்கிய கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அண்ணா, உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன்… என் கணவரை விட்டுவிடுங்கள்..!” மனைவியின் கண்முன்னே கொடூரமாக தாக்கிய கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கார் ஒர்க்ஷாப் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிகள் கும்பல், அதன் உரிமையாளரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்த அந்தக் கும்பல், இளைஞரான உரிமையாளரைச் சரமாரியாக அடித்து உதைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

தன் கணவர் தாக்கப்படுவதைக் கண்டு பதறிப்போன அந்த இளைஞரின் மனைவி, தாக்குதல் நடத்திய கும்பலின் கால்களைப் பிடித்துக்கொண்டு, “அண்ணா, உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன், என் கணவரை விட்டுவிடுங்கள்” எனக் கதறி அழுது மன்றாடியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் கண்ணீரையும் கெஞ்சலையும் சிறிதும் பொருட்படுத்தாத அந்தக் கும்பல், ஈவு இரக்கமின்றித் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in