CRIME
நள்ளிரவு வாக்குவாதத்தில் விபரீதம்.. மதுபோதையில் வந்த கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி.. திடுக்கிடும் பின்னணி..!!
பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ராஜசேகர் (44) மற்றும் மாலாஸ்ரீ (35) தம்பதியினருக்குக் குழந்தை இல்லாத காரணத்தால், அதற்காகச் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாகக் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகருக்கும் மாலாஸ்ரீக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மாலாஸ்ரீ, சமையலறைக் கத்தியால் ராஜசேகரின் மார்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜசேகர் உடனடியாக விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
