LATEST NEWS
“பாமக ஆட்சி அமைந்தால் 6 மாதங்களில் 70% பிரச்சினைகள் தீரும்..!” கடலூர் மேடையில் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேச்சு..!!
தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தால், ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திற்குள்ளாகவே மாநிலத்தின் 70 சதவீதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் பாமகவிடம் அதிகமாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தும் ஆற்றல் தங்கள் கட்சிக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தமிழக மக்கள் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், அதேபோல் எதிர்காலத்தில் பாமகவிற்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்றும் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
