அமெரிக்காவையே உலுக்கிய படுகொலைச் சதி..! டிரம்ப் உயிருக்குக் குறிவைத்த பாகிஸ்தானியருக்கு 330 மாதங்கள் சிறை – பின்னணியில் ஈரான்..? பயங்கர ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமெரிக்காவையே உலுக்கிய படுகொலைச் சதி..! டிரம்ப் உயிருக்குக் குறிவைத்த பாகிஸ்தானியருக்கு 330 மாதங்கள் சிறை – பின்னணியில் ஈரான்..? பயங்கர ஷாக்..!!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட்டிற்கு, அமெரிக்க நீதிமன்றம் சுமார் 28 ஆண்டுகள் (330 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் இணைந்து இவர் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த ஆசிஃப், டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் மற்றும் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொல்லக் கூலிப்படையை அணுகி சுமார் 5 லட்சம் ரூபாய் தருவதாகப் பேரம் பேசியுள்ளார். ஆனால், கூலிப்படை போல் வேடமிட்டிருந்த எஃப்.பி.ஐ (FBI) அதிகாரிகளிடம் அவர் பணத்தைக் கொடுத்தபோது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

Advertisement

நீதிமன்ற விசாரணையில் தனது குற்றத்தை ஆசிஃப் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கூட்டாட்சி நடுவர் நீதிமன்ற நீதிபதி எரிக் ஆர் கோமிட்டீ இந்தச் சிறைத்தண்டனையை விதித்துள்ளார். இதற்கிடையே, டிரம்பைக் கொலை செய்யும் சதித்திட்டத்திற்குப் பின்னால் ஈரான் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in