LATEST NEWS
“கையில் உள்ளாடையுடன் என்விடியா சிஇஓ” டிரம்ப் பகிர்ந்ததாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..? உண்மை பின்னணி என்ன..? பெரும் பரபரப்பு..!!
என்விடியாநிறுவனத்தின் சிஇஓ-வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் ஜென்சன் தனது கையில் உள்ளாடை (Bra) வைத்திருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை எடிட் செய்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னணியில் என்விடியா கொடியுடன் ஜென்சன் கையை உயர்த்துவது போல இந்தப் படம் மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் புகைப்படம் ஒரு நகைச்சுவை மீம் (Meme) பகிர்வு மட்டுமே என்றும், இதனை டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவிடவில்லை என்றும் நெட்டிசன்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
