“EPS காலில் எத்தனை தடவை விழுந்தீங்க?” ஆதாரம் என்கிட்ட இருக்கு… நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய ஆர்.பி. உதயகுமார்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“EPS காலில் எத்தனை தடவை விழுந்தீங்க?” ஆதாரம் என்கிட்ட இருக்கு… நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய ஆர்.பி. உதயகுமார்..!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) குறித்து நிர்மல் குமார் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மல் குமாரின் அரசியல் அனுபவம் என்னவென்றும், இதுவரை அவர் எத்தனை கட்சிகளுக்கு மாறியுள்ளார் என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தபோது நிர்மல் குமார் எத்தனை முறை அவரது காலில் விழுந்து வணங்கினார் என்பதை மறந்துவிட்டாரா என உதயகுமார் சாடினார். அன்றைய காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பேசியதோடு, “இந்த நாட்டில் இவரால் மட்டுமே நல்லது செய்ய முடியும்” என்று நிர்மல் குமார் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

நிர்மல் குமார் அவ்வாறு பேசிய பழைய பேட்டிகள் அனைத்தும் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசுவது ஏற்புடையதல்ல என அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in