பகீர் விபத்து! சாலையில் ஆறாக ஓடிய 25,000 லிட்டர் நச்சு ஆசிட்… திண்டுக்கல்லில் உச்சகட்ட பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர் விபத்து! சாலையில் ஆறாக ஓடிய 25,000 லிட்டர் நச்சு ஆசிட்… திண்டுக்கல்லில் உச்சகட்ட பதற்றம்..!!

Published

on

திண்டுக்கல்லில் ஆபத்தான ரசாயனமான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்து சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆசிட் சாலையில் கசிந்து கொட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டின் நச்சுத்தன்மை காரணமாக அதனை சுவாசிப்பவர்களுக்கு தொண்டை அரிப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உடனடியாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தகவலறிந்து விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர், சாலையில் கசிந்த ஆசிட் மீது அதிகளவு தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதன் வீரியத்தைக் குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Advertisement

மேலும், சாலையில் ஆசிட் தொடர்ந்து பரவாமல் தடுக்கப்பட்டதோடு, விபத்துக்குள்ளான லாரியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதே இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு கசிவைக் கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in