LATEST NEWS
“உடனடியாக விடுவி.. இல்லை என்றால்…” கதை சொல்லி கைது செய்த அரசு..! PM மன்னன் விவகாரத்தில் பொங்கி எழுந்த எடப்படியார்..!!
கைதான அதிமுக நிர்வாகி PM மன்னனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தனது X வலைதளப் பதிவில், MLA முஸ்தபா மூலமாக ஒரு கட்டுக்கதையை புனைந்து, தவெக அரசு இந்த கைதை அரங்கேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமமுக MLA-வை கடத்தி கையெழுத்து பெற்றதையும், தலைமைச் செயலகத்தில் கட்சி இணைப்பு விழா நடத்தி நாடு காணாத கேவலமான செயலை தவெக அரசு அரங்கேற்றியதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
