உதயநிதிக்கு செம நோஸ்கட்.. “அன்று போஸ்ட் மேன்… இன்று லோக் பவனுக்குக் காவலா..?” வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜ்மோகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதிக்கு செம நோஸ்கட்.. “அன்று போஸ்ட் மேன்… இன்று லோக் பவனுக்குக் காவலா..?” வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜ்மோகன்..!!

Published

on

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆளுநர் சந்திப்பு குறித்து தமிழக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் ஆளுநர் பதவியையும், ஆளுநரையும் கடுமையாக விமர்சித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஆளுநர் மாளிகையைச் சுற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொலிகளைச் சுட்டிக்காட்டித் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். அன்று ஆளுநரைப் பார்த்து “நீங்கள் யார்? என்றும், வெறும் போஸ்ட் மேன் ” என்றும் விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், இன்று அதே ஆளுநரைச் சந்திப்பதற்காக லோக் பவனைச் சுற்றிச் சுற்றி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையில், அமைச்சரின் இந்தப் பதிலடி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நிலவும் அரசியல் மோதலின் ஒரு பகுதியாக இந்த வார்த்தைப் போர் பார்க்கப்படுகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in