LATEST NEWS
உஷார்…! வங்கியில் நகை அடமானம் வைத்திருக்கிறீர்களா..? உடனே இதை கவனியுங்கள்.. தங்கம் விலை சரிவால் வந்த புதிய சிக்கல்..!!
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தற்போது பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, தங்கம் விலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதிகத் தொகையைக் கடனாகப் பெற்றவர்களின் அடமான நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகத் திரும்பச் செலுத்துமாறு அல்லது கூடுதல் நகைகளை அடமானமாக வைக்குமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
