LATEST NEWS
“சில பேருக்கு பேஸ்மென்ட் எல்லாம் ஆடிப் போய் கிடக்கு..” கல்வி விருது விழாவில் முதலமைச்சர் விஜய் வைத்த அதிரடி பஞ்ச்..!!
மக்கள் அனைவரும் ஊழலுக்குப் பழகிவிட்டார்கள் என்று கருதி நாம் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. ஊழல் என்பது ஒரு நாள்பட்ட நோயைப் போன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள்பட்ட நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், அதைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்றும், அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலைக் கட்டுப்படுத்தத் தான் எடுத்த அத்தகைய தீவிர முயற்சிகளின் விளைவாகவே, இங்கே சிலருக்கு பேஸ்மெண்ட் எல்லாம் ஆடிப்போய் கிடப்பதாக அவர் தனது பேச்சில் விமர்சித்துள்ளார்.
