பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆண்டுக்கு ரூ.5,000 பரிசுத் தொகை.. தமிழக அரசு அறிவித்த ஜாக்பாட் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆண்டுக்கு ரூ.5,000 பரிசுத் தொகை.. தமிழக அரசு அறிவித்த ஜாக்பாட் அறிவிப்பு..!!

Published

on

300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘முத்துக் குறள் பரிசுத் திட்டத்தின்’ கீழ் ஆண்டுக்குத் தலா ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே உலகப் பொதுமறையான திருக்குறளைக் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து பிழையின்றி ஒப்புவிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘முத்துக் குறள் பரிசுத் திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து தகுதியான 500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்குத் தலா ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கெனவே, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் 1,330 திருக்குறள்களையும் முழுமையாக மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், அவர்களுக்குத் தலா ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொடக்கப்பள்ளி மாணவர்களும் எளிதில் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில், 300 குறள்களை ஒப்புவித்தாலே ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in