CINEMA
“காசு வாங்கிட்டு உடலைக் காட்டுவதில் என்ன தப்பு..?” இளம்பெண்ணின் கேள்விக்கு ஆவுடையப்பன் கொடுத்த நச் பதிலடி.. அரங்கமே அதிர்ந்த தருணம்..!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில், சமூக வலைதளங்களில் சந்தா முறையில் ஆபாச அல்லது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுப் பணம் சம்பாதிப்பது குறித்த விவாதத்தில், இளம்பெண் ஒருவரின் கருத்துக்குத் தொகுப்பாளர் ஆவுடையப்பன் கொடுத்த அதிரடிப் பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பெண் சுதந்திரம் சரியான பாதையில் செல்கிறதா? இல்லையா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விவாதத்தில், சமூக வலைதளங்களில் சந்தா முறையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடும் பெண்கள் தவறான பாதையில் செல்வதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அந்தப் பெண், “எனக்குப் பிடித்த ஆடையை அணிந்து நான் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். அதை எல்லோருக்கும் இலவசமாகக் காட்டுவதில்லை; ஆனால், ஆண்கள் பணம் செலுத்திப் பார்க்கத் தயாராக இருந்தால் நான் காசு வாங்கிவிட்டுக் காட்டுகிறேன். இதில் யாருக்கு என்ன நஷ்டம்? எதற்காக இதைத் தவறாகப் பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பெண்ணின் வாதத்திற்குக் கடுமையான எதிர்வினையாற்றிய தொகுப்பாளர் ஆவுடையப்பன், இதனை ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று மட்டும் கடந்து செல்ல முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “ஒருவர் மது அருந்துவதும் புகைபிடிப்பதும் அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும், திரைப்படங்களில் அக்காட்சிகள் இடம்பெறும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி ஏன் எச்சரிக்கை வாசகங்கள் போடப்படுகின்றன? மற்றவர்கள் அதைப் பின்பற்றிவிடக் கூடாது என்ற சமூகப் பொறுப்பினால்தான்” என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “இன்று ஒரு பெண் சமூக வலைதளத்தில் இவ்வாறு வீடியோக்களை வெளியிட்டு மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதைப் பார்க்கும் மற்றொரு பெண்ணுக்கும், படித்து நல்ல வேலைக்குச் செல்லாமல் குறுக்கு வழியில் இதேபோல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உருவாகும்; இது சமூகத்திற்கு மிகத் தவறான முன்னுதாரணம்” என ஆவுடையப்பன் எச்சரித்தார். உடலைக் காட்டிப் பணம் சம்பாதிப்பதை நமது தமிழ் மரபு ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை என ஆவுடையப்பன் கொடுத்த இந்தப் பதிலடிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
