“200 பேர் ரெடி… குண்டு கவச கண்ணாடியால் கூட காப்பாற்ற முடியாது..” அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு தாதா கும்பல் பகிரங்க கொலை மிரட்டல்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“200 பேர் ரெடி… குண்டு கவச கண்ணாடியால் கூட காப்பாற்ற முடியாது..” அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு தாதா கும்பல் பகிரங்க கொலை மிரட்டல்..!!

Published

on

நடிகர் அமிதாப் பச்சனின் மும்பையில் உள்ள ஜல்சா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தனித்தனியே 3 மெயிலl்கள் வந்த நிலையில், பாலிவுட் நடிகர்களில் ரசிகர்களிடையே அதிக பிரபலம் வாய்ந்த அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனை குண்டு கவச கண்ணாடியால் கூட பாதுகாக்க முடியாது என தற்போது கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பிரபல தாதா கோல்டி தில்லான் கும்பலிடம் இருந்து இந்த கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து, அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கும்பல் தரப்பில் சமூக ஊடகத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், விகாஸ் தாக்குர் மற்றும் தீபக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டதனால் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மும்பையில் 200 பேர் தயாராக உள்ளனர் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராக பேசுபவர்களை எச்சரித்ததுடன், சீக்கிய கலவரத்திற்கு பொறுப்பானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனை குறிப்பிட்டு, துப்பாக்கி குண்டு கவச கண்ணாடியால் கூட அவர்களை பாதுகாக்க முடியாது என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 1-ந்தேதி மும்பையில் உள்ள வீட்டுக்கு வெளியே துப்பாக்கி குண்டு கவச கண்ணாடிக்கு பின்னால் நின்றபடி ரசிகர்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in