CINEMA
“பெண்களைக் கட்டுப்படுத்த நாம் யார்?”.. கணவராக இருந்தாலும் அனுமதி கொடுக்க உரிமையில்லை எனத் துல்கர் சல்மான் அதிரடி..!!
நடிகர் துல்கர் சல்மான் தனது சமீபத்திய நேர்காணலில் பெண்களின் சுதந்திரம் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. பவன் சதினேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, மற்றொருவரின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கணவராக இருந்தாலும், சகோதரராகவோ அல்லது தந்தையாகவோ இருந்தாலும், பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கோ, எதற்கு அனுமதி வழங்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்று துல்கர் சல்மான் வலியுறுத்தியுள்ளார். இப்படத்தில் தான் நடித்துள்ள கிருஷ்ணா கதாபாத்திரம், “நான் அவளிடம் படிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லவில்லை” எனப் பேசும் வசனத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவைக் கொண்ட கல்பனா என்ற கிராமத்துப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் கதாபாத்திரத்தைச் சுற்றிக் கதை நகரும் நிலையில், பெண்களின் சுயசார்பு மற்றும் சுதந்திரம் குறித்த துல்கர் சல்மானின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
