“சோபிதாவை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது..” மனைவி குறித்து மனம் திறந்த நாக சைதன்யா.. வைரலாகும் நெகிழ்ச்சி பேட்டி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“சோபிதாவை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது..” மனைவி குறித்து மனம் திறந்த நாக சைதன்யா.. வைரலாகும் நெகிழ்ச்சி பேட்டி..!!

Published

on

நடிகர் நாக சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலாவிடம் தனக்கு மிகவும் பிடித்த குணங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சோபிதாவிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், அவருடைய துடிப்பான குணம்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள நாக சைதன்யா, பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன சிந்தனைகளையும் அழகாகக் கலந்த ஒரு தனித்துவமான ஆளுமையாக சோபிதா திகழ்கிறார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், எப்போதும் புதுப்புது விஷயங்களைக் கண்டறியவும், புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயாராக இருப்பார் என்றும் நாக சைதன்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நாக சைதன்யா, விடுமுறைக்குச் செல்லும்போது தான் போடும் திட்டம் நிறைவேறாமல் போனால் தான் அப்படியே முடங்கிவிடுவேன் என்றும், ஆனால் சோபிதா உடனடியாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட வழியைக் கண்டுபிடித்து முன்னோக்கிச் செல்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்பாகச் செயல்படவும், புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும் அவரிடமிருந்தே தான் கற்றுக்கொண்டதாகக் கூறிய நாக சைதன்யா, சோபிதாவை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் அது ‘காதல்’தான் எனத் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி நடிகை சோபிதா துலிபாலா, அவருக்கு அன்போடு முத்தமிடும் அழகிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களுடன் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே” எனக் குறிப்பிட்டுத் தனது காதலை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ரொமான்டிக் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in