CINEMA
FLASH: தாயானார் நடிகை சமந்தா.. குழந்தைக்கு பெயரும் வச்சாச்சு.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நவம்பர் 19-ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் மகனுக்கு ‘தேவ் நிடிமோரு’ (Dev Nidimoru) எனப் பெயர் சூட்டியுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அவர் இந்த இனிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இத்தம்பதிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படமும் செய்தியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
