LATEST NEWS
“எங்கள என்ன பேபி சிட்டரா நினைச்சிட்டீங்களா..?!” எம்.எல்.ஏ பல்லவி மேல உச்சக்கட்ட கடுப்பில் அரசு ஊழியர்கள்..!!
எம்.எல்.ஏ பல்லவியின் செயல்களால் அவர் மீது அரசு அதிகாரிகள் கடும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில், அவர் தனது குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அங்கு பணியில் இருந்த 2 துணை தாசில்தார்களிடமும், ஒரு பெண் அலுவலரிடமும் ஒப்படைத்ததாகத் தெரியவருகிறது. குழந்தையைப் பராமரிப்பதற்குத் தனியாக ஓர் உதவியாளரை நியமிக்காமல், அரசு அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைப்பது சரியான செயல் அல்ல என்று ஊழியர்கள் அதிருப்தியுடன் முணுமுணுத்து வருகின்றனர்.
மேலும், அவருடன் எந்தவொரு விஷயம் குறித்தும் சரியாக ஆலோசிக்கவோ அல்லது விவாதிக்கவோ முடிவதில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரிகளைத் தனது சொந்தப் பணிகளுக்குப் பயன்படுத்துவதும், அவர்களிடம் கலந்தாலோசிக்க மறுப்பதும் நிர்வாக ரீதியாகப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
